எந்த ஒரு மொழியையும் எளிதாகக் கற்றுக்கொள்வது எப்படி? - Meeran.Online

Sunday, 26 August 2018

எந்த ஒரு மொழியையும் எளிதாகக் கற்றுக்கொள்வது எப்படி?


எந்த ஒரு மொழியையும் எளிதாகக் கற்றுக்கொள்வது எப்படி?

நூலாசிரியர்: நாகராஜ்

மொழி : தமிழ்

நூல் வகை: கல்வி, கட்டுரைகள்

நூல் குறிப்பு:


ஒரு மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புவர்கள் அனைவரும் கைவசம் வைத்திருக்க வேண்டிய அவசியமானதும், அத்தியாவசியமானதுமான ஒரு நூல் இந்த நூல். ஒரு மொழியைக் கற்றுக் கொள்வதற்கான வழிமுறைகள் என்ன, எந்தெந்த வழிகளில் எல்லாம் ஒரு மொழியைத் திறன்பட எளிதாகக் கற்றுக் கொள்ள முடியும். அதற்கான வசதிகளும், வாய்ப்புகளும் என்னென்ன என்பதைப் பற்றியெல்லாம் இந்த நூல் பேசுகிறது.
அனைவருக்கும் புரியும் வகையில் தெளிவான, எளிமையான தமிழ் நடையிலேயே இந்தப் புத்தகம் எழுதப் பட்டுள்ளது. இதில் பல்வேறு தலைப்புகள் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் ஒரு சில உங்கள் பார்வைக்கு

1. குழந்தையைப் போல் கற்றுக்கொள்ளுங்கள்
2. உற்ற துணையைத் தேர்ந்தெடுங்கள்
3. செய்தித்தாள்கள் படிப்பது சரியாʔ
4. புதிய மொழியைக் கற்றுக் கொள்ள உதவும் இணையதளங்கள்

எந்த ஒரு மொழியையுமே நாம் எளிதாகக் கற்றுக்கொள்ளலாம். அதற்குத் தேவை ஆர்வமும், விடாமுயற்சியும் தான். மண்ணில் ஆழ வேரூண்றி வளர்ந்து நிற்கும் ஆலமரம் போல உள்ளத்தில் ஒரு மொழியைக் கற்க வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக வேரூன்றி வளர வேண்டும். நம்முடைய மனதில் அதனைக் கற்றே ஆக வேண்டும் என்கிற ஒரு தீவிரமான, விடாப்பிடியான எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

Download