காவலன் ஆப்

 

பெண்களே உங்கள் மொபைல் போனில் இருக்கவேண்டிய ஆப்
*ஒவ்வொருவரின் மொபைல் போனிலும் இருக்கவேண்டிய ஆப்*


முக்கியமாக பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் போனில் இருக்கவேண்டிய ஆப்


இந்த நவீன உலகில் குற்றங்கள் பெருகி வந்துகொண்டே இருக்கின்றது
காவலர்களும் திறம்பட செயல்பட்டு குற்றம் செய்தவர்களை கண்டுபிடிக்கின்றார்கள்


அதேசமயம் சில நேரங்களில் சில வழக்குகள் சவாலானதாக இருக்கும்
அதனால் பொதுமக்களுக்காக உதவிடும் காவலன் ஆப் செயலியை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.


பெண்கள் மற்றும் முதியவர்கள் அவசர தேவைக்கு காவல் துறையை அழைக்க தங்கள் கைபேசிகளில் Kavalan SOS app பயன்படுத்திக் கொள்ளலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.


ஆப் டவுன்லோடு செய்ய

Download
இந்த காவலன் ஆப்  அனைத்து போன்களிலும் பயன்படுத்தலாம்.

அவசரத்தில் அழைப்பதற்கு அந்த ஆப்பில் உள்ள ஒரு பட்டனை ஒரு முறை தொட்டாலே போதும் நீங்கள் இருக்கும் இடம்  ஜிபிஎஸ் மூலம் காவல்துறை கட்டுப்பாடு அறைக்கு தெரிந்துவிடும்

காவலர்கள் உடனடியாக உங்களிடம்  பேசும் வசதி காவல் கட்டுப்பாட்டறையில் உள்ளது.

மேலும் அந்த பட்டனை அழுத்தியவுடன் நான் ஆபத்தில் இருக்கின்றேன் என்று அதில் பதிவு செய்துள்ளவர்களின் எண்களுக்கு தானாகவே செய்தி சென்றுவிடும்

மேலும் உடனடியாக GPS இயங்க ஆரம்பித்து போனில் உள்ள கேமரா தானாகவே 15ந்தே  வினாடிகளில் வீடியோ எடுத்து காவல் கட்டுப்பாட்டறைக்கு அனுப்பிவிடும்.

மேலும் உங்களால் ஆப்பில் சென்று பட்டனை அழுத்தமுடியவில்லை என்றால் உங்கள் போனை பலமாக அசைத்தால் போதும் மேலுள்ள அனைத்து வசதியும் உடனடியாக செயல்பட ஆரம்பிக்கும்.

மேலும் மிக முக்கியமாக இண்டர்நெட் இல்லாத இடங்களிலும் கூட SMS Alert மூலமாக செயல்படும்

எனவே உங்கள் அவசர தேவையின்போது அதாவது இயற்கை சீரழிவு, பலாத்காரம், கடத்தல், திருட்டு, ஈவ் டீசிங் போன்ற இக்கட்டான நேரங்களில் இருந்து விடுப்பட இந்த ஆப்பில் ஒரு பட்டனை அழுத்தினால் போதும்


எனவே அனைவரும் உடனடியாக இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்

அவசர நிலையில் இருக்கும் பெண்கள், முதியோர்கள் மற்றும் பொதுமக்களுக்கு  பாதுகாப்பு செயலியாக 24 மணி நேரமும் இயங்குவதால் இந்த வசதியை தங்கள் கைபேசிகளில் பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளுங்கள்